விலகினார் ஐ.சி.சி., சேர்மன் | ஜூலை 01, 2020

தினமலர்  தினமலர்
விலகினார் ஐ.சி.சி., சேர்மன் | ஜூலை 01, 2020

துபாய்: நான்கு ஆண்டுகள் ஐ.சி.சி., தலைவராக இருந்த இந்தியாவின் சஷாங்க் மனோகர், நேற்று பதவி விலகினார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சேர்மனாக இந்தியாவின் சஷாங்க் மனோகர் 62, இருந்தார். தொடர்ந்து இருமுறை (தலா 2 ஆண்டுகள்) தேர்வு செய்யப்பட்ட இவரது பதவிக்காலம் சமீபத்தில் முடிந்தது. இருப்பினும் இரண்டு மாதங்கள் பதவியில் நீடித்தார்.

புதிய சேர்மனாக இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் கங்குலி, கோலின் கிரேவ் (இங்கிலாந்து), டேவ் கேமரான் (விண்டீஸ்) இடையே போட்டி காணப்படும் எனத் தெரிகிறது. இருப்பினும் ‘சேர்மன்’ தேர்தல் குறித்து முறைப்படி அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.

தற்போது சஷாங்க் மனோகர், முறைப்படி பதவி விலகினார். புதிய ‘சேர்மன்’ தேர்வு செய்யப்படும் வரை, துணை சேர்மனாக உள்ள இம்ரான் கவாஜா, தற்காலிக தலைவராக செயல்படுவார்.

மூலக்கதை