பட்லர் அணி அபாரம் * பிராசே அரைசதம் | ஜூலை 01, 2020

தினமலர்  தினமலர்
பட்லர் அணி அபாரம் * பிராசே அரைசதம் | ஜூலை 01, 2020

சவுத்தாம்ப்டன்: ஸ்டோக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் பட்லர் அணி வீரர் பிராசே அரைசதம் விளாசினார்.

இங்கிலாந்து அணி சொந்தமண்ணில் விண்டீசிற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் 8ம் தேதி சவுத்தாம்ப்டனில் துவங்க உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தடைபட்ட பின் நடக்கும் முதல் தொடர் இது. இதற்கான இங்கிலாந்து அணி, மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் பங்கேற்கிறது.

சவுத்தாம்ப்டனில் நேற்று துவங்கிய இப்போட்டியில் பட்லர், ஸ்டோக்ஸ் தலைமையில் பிரிந்து இங்கிலாந்து அணி களமிறங்கியது.

‘டாஸ்’ வென்ற ஸ்டோக்ஸ் அணி, பீல்டிங் தேர்வு செய்தது. பட்லர் அணிக்கு பர்ன்ஸ், பிராசே ஜோடி துவக்கம் கொடுத்தது. பர்ன்ஸ் 21 ரன்னுக்கு அவுட்டானார். மறுபக்கம் பிராசே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் அரைசதம் எட்டினார். டென்லே 48 ரன் எடுத்தார். பிராசே 85 ரன்கள் எடுத்து அவுட்டானார். போப் (25) நீடிக்கவில்லை. 

முதல் நாள் ஆட்டம் முடிவதற்கு சற்று முன் முதல் இன்னிங்சில் பட்லர் அணி 4 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்திருந்தது. லாரன்ஸ் (46), கேப்டன் பட்லர் (10) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

ஜோசுவா சதம்

விண்டீசின் ஹோல்டர், பிராத்வைட் அணிகள் மோதும் 4 நாள் பயிற்சி போட்டி இங்கிலாந்தின், மான்செஸ்டரில் நடக்கிறது. மூன்றாவது நாள் ஆட்டத்தில் ஹோல்டர் அணி, முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்திருந்தது. ஜோசுவா டா சில்வா (75), ரெய்பர் (14) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூலக்கதை