உடல் உறுப்புகள் தானம் செய்த ஜெனிலியா - ரித்தேஷ்

தினமலர்  தினமலர்
உடல் உறுப்புகள் தானம் செய்த ஜெனிலியா  ரித்தேஷ்

தமிழில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'பாய்ஸ்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஜெனிலியா. பின்னர் 'சச்சின், சென்னை காதல், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் பல தெலுங்கு, ஹிந்திப் படங்களிலும் நடித்தார்.

ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கைத் திருமணம் செய்து கொண்டு நடிப்பதை விட்டு விலகியுள்ளார். நேற்று உலக டாக்டர்கள் தினத்தில் ஜெனிலியாவும், அவரது கணவர் ரித்தேஷும் உடல் உறுப்பு தானப் பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

“நானும் ரித்தேஷும் இது குறித்து நீண்ட காலமாகவே யோசித்து வந்தோம், ஆனால், அதை செய்ய முடியாமலே இருந்தது. இன்று(நேற்று ஜூலை 7) டாக்டர்கள் தினத்தில் எங்களது உடல் உறுப்புகளை தானம் செய்ய வாக்குறுதி கொடுத்துவிட்டோம். அடுத்தவருக்கு நாம் தரும் மிகப் பெரும் பரிசு, 'வாழ்க்கைப் பரிசு' தான். உயிர்களைக் காப்பாற்ற இது போல நீங்களும் உங்களது உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்,” என்று கேட்டுக கொண்டுள்ளார்.

அவர்களின் இந்த தானத்திற்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

மூலக்கதை