பார்சிலோனா மீண்டும் டிரா

தினகரன்  தினகரன்
பார்சிலோனா மீண்டும் டிரா

ஸ்பெயினில் நடக்கும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் பார்சிலோனா - அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதிய லீக் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. பார்சிலோனா சார்பில் லியோனல் மெஸ்ஸி (50’ பெனால்டி) கோல் போட்டார். எதிரணியின் டீகோ கோஸ்டா 11வது நிமிடத்தில் ‘ஓன் கோல்’ போட்டு பார்சிலோனாவுக்கு முன்னிலை கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அத்லெடிகோ மாட்ரிட் வீரர் சால் 19வது மற்றும் 62வது நிமிடங்களில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார். ரியல் மாட்ரிட் அணி 32 போட்டியில் 71 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. 33 போட்டியில் விளையாடி உள்ள பார்சிலோனா (70 புள்ளி), அத்லெடிகோ மாட்ரிட் (59), செவில்லா (57) அணிகள் அடுத்த இடங்களில் உள்ளன. மெஸ்ஸி 700: இந்த போட்டியில் மெஸ்ஸி அடித்த கோல், கால்பந்து வாழ்க்கையில் அவரது 700வது கோலாக அமைந்தது. இதில் பார்சிலோனா அணிக்காக மட்டும் 724 போட்டியில் 630 கோல் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 700 கோல் அடித்த 7வது வீரர் என்ற பெருமையும் மெஸ்ஸிக்கு கிடைத்துள்ளது.

மூலக்கதை