சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் 6 வாரத்தில் பதில் அளிக்க தமிழக டிஜிபிக்கு உத்தரவு: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

தினகரன்  தினகரன்
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் 6 வாரத்தில் பதில் அளிக்க தமிழக டிஜிபிக்கு உத்தரவு: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி: ‘சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக ஆறு வாரத்திற்குள் தமிழக டிஜிபி, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி, சிறைத்துறை ஐஜி ஆகியோர் பதிலளிக்க வேண்டும்,’ என தேசிய மனித உரிமைகள் ஆணையம் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகனுமான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி மதுரை உயர் நீதிமன்ற கிளை தானாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.இந்நிலையில், இச்சம்பவம் பற்றி அடுத்த 6 வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி தமிழக டி.ஜி.பி,, தூத்துக்குடி எஸ்.பி., சிறைத்துறை ஐ.ஜிக்கு ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேற்று உத்தரவிட்டது. இதற்கான நோட்டீசையும் அவர்களுக்கு அனுப்பியது. போலீசால் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி இரு தினங்களுக்கு முன், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் திமுக.வின் தூத்துக்குடி எம்பி கனிமொழி புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை