கேரளாவில் புதிதாக 151 பேருக்கு கொரோனா

தினமலர்  தினமலர்
கேரளாவில் புதிதாக 151 பேருக்கு கொரோனா

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4593 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் மேலும் 131 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 2,130 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மொத்தம் 23 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். கேரளாவில் மொத்தம் 124 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.

புதிதாக பாதிப்பு அடைந்தவர்களில் அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் 34 பேரிடமும், கண்ணூர் மாவட்டத்தில் 27 பேரிடமும், திருச்சூர் மாவட்டத்தில் 18 பேரிடமும் தொற்று கண்டறியபட்டுள்ளது.

மூலக்கதை