சீனா மீதான கோபம் பல மடங்கு அதிகரிக்கிறது: டொனால்டு டிரம்ப்

தினமலர்  தினமலர்
சீனா மீதான கோபம் பல மடங்கு அதிகரிக்கிறது: டொனால்டு டிரம்ப்


வாஷிங்டன் :கொரோனா பரவலுக்கு காரணமான சீனா மீதான கோபம் பலமடங்கு அதிகரித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
'அமெரிக்காவின் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தவறான பாதையில் செல்வதால் பாதிப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை' என அந்நாட்டின் தொற்றுநோய்த்துறை நிபுணர் அந்தோணி பவுசி நேற்று முன்தினம் கூறினார். இதனால் பாதிப்பின் எண்ணிக்கை பலமடங்கு உயரும் எனவும் அவர் எச்சரித்தார்.



இதையடுத்து அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள 'டுவிட்டர்' பதிவில் 'அமெரிக்காவில் கடும் பாதிப்பினை ஏற்படுத்திய வைரஸ் உலகம் முழுதும் தன் கோர முகத்தை காட்டியுள்ளது. இதனால் சீனா மீதான கோபம்
பல மடங்கு அதிகரித்து
உள்ளது' என கூறியுள்ளார்.
இந்நிலையில் 'நோயை முறையாக கையாளாத டிரம்பின் நிர்வாகம் மக்களை திசை திருப்ப தொற்றுநோயை அரசியலாக்குகிறது' என சீனா குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கிடையே கொரோனா வைரசுக்கு எதிராக இரண்டு மருந்துகள் பலன் தருவது உறுதியாகி உள்ளது. அதில் 'ரெம்டெசிவிர்' என்ற மருந்து முழுவதையும் அடுத்த மூன்று மாதங்களுக்கு அமெரிக்கா வாங்கியுள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வேறு எந்த நாடுகளுக்கும் இந்த மருந்து கிடைக்காத வகையில் ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்யும் அமெரிக்காவின் நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாக சுகாதார வல்லுனர்கள் கூறி
உள்ளனர்.

மூலக்கதை