வருமானம் தரும் கேம்ஸ் ஸ்டார்ட் அப்கள்: பாரம்பரிய கேம்ஸ் ஆப் உருவாக்குவது எப்படி

தினமலர்  தினமலர்
வருமானம் தரும் கேம்ஸ் ஸ்டார்ட் அப்கள்: பாரம்பரிய கேம்ஸ் ஆப் உருவாக்குவது எப்படி

மதுரை: ஊரடங்கு முடிவுக்கு வரவில்லை. வீட்டுக்குள் முடங்கியவர்களின் அதீத பொழுதுபோக்காக தாயம், பல்லாங்குழி, சொட்டாங்கல், ஆடுபுலி ஆட்டம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் உயிர்பெற்றுள்ளன. லுாடோ என்ற பெயரில் இளைஞர்கள் மத்தியில் தாயம் ஆன்லைனில் விளையாடப்படுகிறது. பரமபதம் விளையாட்டும் வெறும் பாம்புகள் வடிவில் விளையாடப்படுகிறது.பாரம்பரிய விளையாட்டுகளுக்கான ஸ்டார்ட் அப்களை நாம் உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடியும் பேசியுள்ளார்.இந்த விளையாட்டுகளை ஆன்லைனில் எப்படி உருவாக்குவது என வழிகாட்டுகிறார், பொருளாதார ஆலோசகர் சேதுராமன் சாத்தப்பன்.

அவர்கூறியது:இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துவோர் 75 கோடி. ஆன்லைன் கேம்ஸ் விளையாடுவோர் 25 கோடி. ஆண்டுதோறும் 40 சதவீதம் பேர் கேம்ஸ் ஆப் டவுன்லோடு செய்கின்றனர். இந்தியர்கள் தான் அதிகம் விளையாடுகின்றனர். கேம்ஸ் ஆப்களின் மூலம் உலகளவில் 7 லட்சத்து 50ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இந்தியாவில் அடுத்தாண்டு 7500 கோடி ரூபாயாக உயரும். மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது, இத்தொகை குறைவு தான். எதிர்காலத்தில் பிரமாதமான வளர்ச்சி இதில் உள்ளது.இந்தியர்கள் கண்டுபிடித்த செஸ் தான், டாப் 10 விளையாட்டுகளில் பிரபலமாக உள்ளது. தாயம், பல்லாங்குழி, ஆடுபுலிஆட்டம் போன்ற விளையாட்டுகளில் புது வடிவமைப்பை ஸ்டார்ட் அப்களில் கொண்டு வரலாம். விளையாட்டுகளை புதுமையாக வடிவமைக்கும் போது அவற்றை டவுன்லோடு செய்பவர்களும் அதிகமாவர். இதன் மூலம் வருமானம் அதிகரிக்கும். இந்த ஆன்லைன் விளையாட்டுகளை உருவாக்குவதற்கு கூகுள் அசெலேரட் ஆறுமாத பயிற்சி அளிக்கிறது.https://events.withgoogle.com/indie-games-accelerator/மூலம் விண்ணப்பிக்கலாம் என்றார்.

மூலக்கதை