அதிபர் தேர்தலில் மோசடி: டிரம்ப், பிடன் பரஸ்பர புகார்

தினமலர்  தினமலர்
அதிபர் தேர்தலில் மோசடி: டிரம்ப், பிடன் பரஸ்பர புகார்

அட்லாண்டா; 'இந்தாண்டு இறுதியில் நடக்கும் அதிபர் தேர்தல் ஓட்டுப் பதிவில் மோசடி நடக்கும்' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், அவரை எதிர்த்து போட்டியிட உள்ள, ஜோ பிடன் பரஸ்பரம் புகார் கூறியுள்ளனர்.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். கொரோனா வைரஸ்ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர், ஜோ பிடன் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளார்.


கொரோனா வைரஸ் பரவலையடுத்து, இந்தாண்டு தேர்தலில், தபால் ஓட்டுகளை விரிவுபடுத்தவும், ஓட்டளிக்கும் நேரத்தை நீட்டிக்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், பல்வேறு பிரசார கூட்டங்களில் பேசிய, டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பிடன், 'நாட்டின் வரலாற்றிலேயே, இந்த அதிபர் தேர்தலில் தான் அதிக அளவு மோசடிகள் நடக்கும்' என, பரஸ்பரம் விமர்சித்து, புகார் கூறி வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோது, கட்சியின் அதிபர் வேட்பாளர் மற்றும் செனட் எம்.பி., பதவிக்கான வேட்பாளர் தேர்தல், பல மாகாணங்களில் நடந்தன. அப்போது முதல், இது போன்ற குற்றச்சாட்டுகளை, புகார்களை, விமர்சனங்களை, இருவரும் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய, ஜோ பிடன், 'இந்த அதிபர் தேர்தலில், அனைத்து நிலைகளிலும் மோசடிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதனால், நாம் மிகவும் கவனத்துடன் இதை கண்காணிக்க வேண்டும்' என, கூறினார்.


மக்களின் கருத்து


அதேபோல், சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'தபால் ஓட்டுகள்; அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் மோசடி தேர்தலை சந்திக்க உள்ளோம்' என, டிரம்ப் பதிவிட்டிருந்தார்.தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், தோல்வி அடைந்தால் அதற்கான காரணத்தை தற்போதே தேடி வைத்து விட்டனர் என்பதே, மக்களின் கருத்தாக உள்ளது.

மூலக்கதை