சீன 'ஆப்'கள் தடை விதிப்பிற்கு அமெரிக்கா ஆதரவு

தினமலர்  தினமலர்
சீன ஆப்கள் தடை விதிப்பிற்கு அமெரிக்கா ஆதரவு

வாஷிங்டன்: நாட்டின் பாதுகாப்பு கருதி, 'டிக்டாக், ஷேர்இட், ஹலோ' உள்ளிட்ட, சீன நிறுவனங்களின், 59 மொபைல் போன், 'அப்ளிகேஷன்ஸ்' என்ற செயலிகளுக்கு இந்தியா விதித்துள்ள தடைக்கு, அமெரிக்காவில் ஆதரவு அதிகரித்துள்ளது.


லடாக் எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதனால், எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து, 'சீனப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்; சீனப் பொருட்களை யாரும் பயன்படுத்தக் கூடாது' என, ஏராளமானோர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், சீனாவை தலைமையிடமாக வைத்து செயல்படும், டிக்டாக், ஷேர்இட், ஹலோ உள்ளிட்ட, 59 மொபைல் போன் செயலிகளை, மத்திய அரசு அதிரடியாக தடை செய்தது.இந்த செயலிகள், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, ஒருமைப்பாடு, ராணுவம் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படுவதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல், சீன செயலிகளுக்கு இந்தியா விதித்துள்ள தடைக்கு, அமெரிக்காவில் பலரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இந்திய நடவடிக்கையை தொடர்ந்து, அமெரிக்காவிலும், டிக் டாக் உட்பட பல சீன செயலிகளுக்கு, தடை விதிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை