தயாரிப்பு துறை உற்பத்தி ஜூனில் சிறிது முன்னேற்றம்

தினமலர்  தினமலர்
தயாரிப்பு துறை உற்பத்தி ஜூனில் சிறிது முன்னேற்றம்

புது­டில்லி:நாட்­டின் தயா­ரிப்பு துறை உற்­பத்தி வளர்ச்சி, ஜூன் மாதத்­தில் ஓர­ளவு
முன்­னேற்­றத்தை சந்­தித்­துள்­ளது. இருப்­பி­னும், பல்­வேறு மாநி­லங்­களில் ஊர­டங்கு
கார­ண­மாக, வணிக நிலைமை தொடர்ந்து பாதிப்­புக்­குஉள்­ளாகி இருப்­ப­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

பிரிட்­டனை சேர்ந்த, ‘ஐ.எச்.எஸ்., மார்­கிட்’ எனும் நிறு­வ­னம், உலோ­கம், ரசா­ய­னம், காகி­தம், உணவு, ஜவுளி உள்­ளிட்ட எட்டு பிரி­வு­களை சேர்ந்த, 400 நிறு­வ­னங்­க­ளின், ஜூன் மாத தயா­ரிப்பு நில­வ­ரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளி­யிட்­டுள்­ளது.

அதில் கூறப்­பட்­டுஉள்­ள­தா­வது:இந்­தாண்டு, ஜூன் மாதத்­தில், தயா­ரிப்பு துறை­யின் உற்­பத்தி வளர்ச்சி அடிப்­ப­டை­யி­லான, ‘பி.எம்.ஐ.,’ குறி­யீடு, 47.2 புள்­ளி­க­ளாக உயர்ந்­துள்­ளது. இது, கடந்த மே மாதத்­தில், 30.8 புள்­ளி­க­ளாக இருந்­தது. ‘பி.எம்.ஐ.,’ குறி­யீடு, 50 புள்­ளி­க­ளுக்கு அதி­க­மாக இருந்­தால், அது வளர்ச்­சியை குறிக்­கும். 50 புள்­ளி­க­ளுக்கு கீழே இருந்­தால், சரிவை குறிக்­கும்.
ஜூன் மாதத்­தில், இக்­கு­றி­யீடு, 47.2 புள்­ளி­க­ளாக குறைந்­தி­ருப்­பி­னும், மே மாதத்­து­டன் ஒப்­பி­டும்­போது, ஓர­ளவு வளர்ச்சி நிலை திரும்பி வரு­வ­தாக தெரி­கிறது.

இருப்­பி­னும், தொடர்ந்து மூன்­றா­வது மாத­மாக வளர்ச்சி குறைந்தே உள்­ளது. தொடர்ந்து, 32 மாதங்­க­ளாக வளர்ச்­சிப் போக்­கில் இருந்த நிலை­யில், கடந்த ஏப்­ரல் மாதத்­தில், வளர்ச்சி சரி­யத் தொடங்­கி­யது.மே மாத நில­வ­ரத்­து­டன் ஒப்­பிட்டு பார்க்­கும்­போது, இந்­திய உற்­பத்தி துறை, ஜூன் மாதத்­தில் ஓர­ளவு நிலைத் தன்­மைக்கு திரும்பி வந்­துள்­ளது தெரி­கிறது.
இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.


அதி­க­ரித்து வரும் கொரோனா பர­வல் மற்­றும் ஊர­டங்கு நீட்­டிப்பு ஆகிய கார­ணங்­க­ளால், தேவை­கள் தொடர்ந்து குறைந்து வரு­கின்றன. ஊர­டங்கு மேலும் நீட்­டிக்­கப்­படும் நிலை­யில், பொரு­ளா­தார மீட்சி மேலும் தாம­த­மா­கும்.

எலி­யட் கெர்

பொரு­ளா­தார நிபு­ணர், ஐ.எச்.எஸ்., மார்­கிட்.

மூலக்கதை