ஜி.எஸ்.டி., வசூல் நிலவரம் ஜூன் மாதத்தில் அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
ஜி.எஸ்.டி., வசூல் நிலவரம் ஜூன் மாதத்தில் அதிகரிப்பு

புது­டில்லி:ஜி.எஸ்.டி., எனும் பொருட்­கள் மற்­றும் சேவை­கள் வரி வசூல், கடந்த ஜூன்
மாதத்­தில், 90 ஆயி­ரத்து, 917 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.

இதுவே, கடந்த மே மாதத்­தில், 62 ஆயி­ரத்து, 9 கோடி ரூபா­யா­க­வும், ஏப்­ரல் மாதத்­தில்,
32 ஆயி­ரத்து, 294 கோடி ரூபா­யா­க­வும் இருந்­தது. ஏப்­ரல், மே மாத வசூல் வரு­வா­யு­டன்
ஒப்­பி­டும்­போது, ஜூன் மாதத்­தில்அதி­க­ரித்­துள்­ளது.இருப்­பி­னும், கடந்த ஆண்டு, இதே ஜூன் மாதத்­து­டன் ஒப்­பி­டும்­போது, 9 சத­வீ­தம் குறை­வா­கும்.


இதே­போல், ஏப்­ரல் முதல் ஜூன் வரை­யி­லான முதல் காலாண்டை பொறுத்­த­வரை, ஜி.எஸ்.டி., வசூல், கடந்த நிதி­யாண்­டின் முதல் காலாண்­டு­டன் ஒப்­பி­டும்­போது, 59 சத­வீ­தம் சரி­வைக்
கண்­டுள்­ளது. இந்த சரி­வுக்கு முக்­கிய கார­ணம், கொரோனா பர­வல் கார­ண­மாக நாடு முடக்­கப்­பட்­டது தான்.

இது குறித்து, நிதி­ய­மைச்­ச­கம் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது:ஜி.எஸ்.டி., வரி வசூலை பொறுத்­த­வரை, இரண்டு கார­ணங்­க­ளால் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. முத­லில் தொற்­று­நோய் பர­வ­லின் தாக்­கத்­தால், பொரு­ளா­தார பாதிப்பு ஏற்­பட்டு, வரு­வாய் பாதிக்­கப்­பட்­டது.அடுத்து, தொற்று நோய் பர­வல் கார­ண­மாக, வரு­மா­னத்தை தாக்­கல் செய்­வ­தி­லும், வரி செலுத்­து­வ­தி­லும்
அர­சாங்­கம் அளித்த தளர்­வு­கள் கார­ண­மா­க­வும் வசூல் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

இருப்­பி­னும், கடந்த மூன்று மாதங்­க­ளின் புள்­ளி­வி­ப­ரங்­கள் அடிப்­ப­டை­யில் பார்க்­கும்­போது, ஜி.எஸ்.டி., வரு­வாய் மீட்சி அடைந்து வரு­வதை காண­மு­டி­கிறது.இவ்­வாறு நிதி­ய­மைச்­ச­கம் தெரி­வித்­துள்­ளது.

மூலக்கதை