கொரோனாவால் ஆஸி.-ஜிம்பாப்வே தொடர் ரத்து

தினகரன்  தினகரன்
கொரோனாவால் ஆஸி.ஜிம்பாப்வே தொடர் ரத்து

மெல்போர்ன்: கொரோனா பீதி காரணமாக ஆகஸ்ட 9ம் தேதி தொடங்கவிருந்த ஆஸ்திரேலியா-ஜிம்பாப்வே ஒருநாள் தொடர் ரத்து செய்யப்படுவதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இங்கிலாந்தை போலவே கொரோனா பீதிக்கிடையிலும் கிரிக்கெட் போட்டிகளை நடத்த ஆஸ்திரேலியாவும் முனைப்பு காட்டியது. ஜிம்பாப்வேயுடன் ஆகஸ்ட்டில் ஒருநாள் தொடர் (ஆக. 9, 12, 15), அடுத்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியாவுடன் டெஸ்ட் தொடர்கள் உட்பட அடுத்த 6 மாதத்திற்கான போட்டி அட்டவணையை ஆஸ்திரேலியா அறிவித்திருந்தது.மேலும், ஆஸ்திரேலியாவில் ஐசிசி ஆண்கள் உலக கோப்பை டி20 தொடரை அக்.18 முதல் நவ.15ம் தேதி வரை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா  தொற்று பீதி குறையாததால் ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே இடையிலான ஒருநாள் தொடர் ரத்து செய்யப்படுவதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா நேற்று அறிவித்துள்ளது. இதனால் ஐசிசி உலக கோப்பை டி20 தொடரை நடத்துவதற்கான வாய்ப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. டி20 உலககோப்பை போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் ஏற்கனவே வலியுறுத்தி வருகின்றனர். இங்கிலாந்தை போல் கொரோனா பீதிக்கு இடையில் போட்டியை நடத்தும் அபாயகரமான முடிவை எடுக்க ஆஸ்திரேலியா தயங்குவதால், உலக கோப்பை தொடர் நடப்பது சந்தேகம் தான்.

மூலக்கதை