ஆஸி., தொடர் ஒத்திவைப்பு | ஜூன் 30, 2020

தினமலர்  தினமலர்
ஆஸி., தொடர் ஒத்திவைப்பு | ஜூன் 30, 2020

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகள் மோத இருந்த ஒருநாள் தொடர் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய மண்ணில் ஜிம்பாப்வே அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க இருந்தது. கடந்த 2004க்குப் பின் நடக்கும் தொடர், 2014க்குப் பின் இரு அணிகள் மோதும் போட்டி என்பதால் பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது.

ஆனால் ஆஸ்திரேலியாவில் திடீரென கொரோனா பரவல் வேகம் எடுத்ததால், இத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. கிரிக்கெட் ஆஸ்திரேலிய தற்காலிக தலைவர் நிக் ஹாக்லே கூறுகையில்,‘‘தொடர் ஒத்திவைக்கப்பட்டது ஏமாற்றமாக உள்ளது. இருப்பினும் வீரர்கள், பயிற்சியாளர்கள், பணியாளர்கள் மற்றும் ரசிகர்கள் நலன் கருதி இந்த உணர்வுபூர்வமான முடிவு எடுக்க வேண்டியதாயிற்று. வேறு தேதிகளில் இத்தொடர் கண்டிப்பாக நடத்தப்படும்,’’ என்றார்.

மூலக்கதை