கேப்டனாக இருப்பது கவுரவம் * பென் ஸ்டோக்ஸ் பெருமை | ஜூன் 30, 2020

தினமலர்  தினமலர்
கேப்டனாக இருப்பது கவுரவம் * பென் ஸ்டோக்ஸ் பெருமை | ஜூன் 30, 2020

லண்டன்: ‘‘இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக இருப்பது கவுரவமானது,’’ என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்தார்.

இங்கிலாந்து சென்றுள்ள விண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் 8ம் தேதி சவுத்தாம்ப்டனில் துவங்க உள்ளது. ஜோ ரூட், மனைவி காட்ரெல் பிரசவத்திற்கு செல்வதால், இங்கிலாந்து அணி கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் 29, செயல்பட உள்ளார். இதுகுறித்து அவர் கூறியது:

பொதுவாக போட்டிகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய அணுகுமுறையை எப்போதும் வெளிப்படுத்தி, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என நம்புவேன். ஒருவேளை கேப்டன் ஆகிவிட்டேன் என்பதற்காக எனது ‘ஸ்டைலில்’ மாற்றம் எதுவும் செய்ய மாட்டேன்.

மற்றபடி இங்கிலாந்து அணியின் கேப்டனாக களமிறங்க வாய்ப்பு கிடைப்பது மிகவும் கவுரமானது. ஒரு போட்டிக்கு மட்டும் என்றால் கூட, ‘நானும் இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக இருந்தேன்’ என எப்போதும் சொல்லலாம்.

இவ்வாறு பென் ஸ்டோக்ஸ் கூறினார்.

மூலக்கதை