தேறினர் பாக்., வீரர்கள் | ஜூன் 30, 2020

தினமலர்  தினமலர்
தேறினர் பாக்., வீரர்கள் | ஜூன் 30, 2020

லாகூர்: இங்கிலாந்து மண்ணில் நடந்த கொரோனா சோதனையில் அனைத்து வீரர்களுக்கும் தொற்று இல்லை என உறுதியானது.

பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட், மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் (ஆக., 30–செப். 2) பங்கேற்க இங்கிலாந்து சென்றது. 20 வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட 11 பேர் என மொத்தம் 31 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் கொரோனோ சோதனை நடந்தது. இதில் அனைவருக்கும் தொற்று எதுவும் இல்லை என உறுதியானது. இதை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்தது.

ஹபீஸ் தேர்ச்சி

இதனிடையே இங்கிலாந்து செல்லும் முன் கடந்த 26ம் தேதி பாகிஸ்தான் வீரர்களிடம் நடந்த கொரோனா சோதனையில் 10 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது.

தற்போது தொற்று காணப்பட்ட வீரர்களிடம் மீண்டும் நடத்தப்பட்ட சோதனையில் 6 பேருக்கு ‘நெகட்டிவ்’ என வந்தது. இதனால் பகர் ஜமான், முகமது ஹஸ்னைன், முகமது ஹபீஸ், முகமது ரிஸ்வான், ஷதாப் கான், வகாப் ரியாஸ் என ஆறு வீரர்களும் விரைவில் இங்கிலாந்து கிளம்ப உள்ளனர்.

மூலக்கதை