ரஷ்யாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு!: ஒரே நாளில் 7,000 பேருக்கு பாதிப்பு உறுதி!!!

தினகரன்  தினகரன்
ரஷ்யாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு!: ஒரே நாளில் 7,000 பேருக்கு பாதிப்பு உறுதி!!!

ரஷ்யா: உலகளவில் கொரோனா பாதிப்பில் 3ம் இடத்தில் உள்ள ரஷ்யாவில் தொற்று பரவலும், உயிரிழப்பும் அதிதீவிரமடைந்துள்ளது. ரஷ்யாவில் ஒரேநாளில் 6,719 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இத்துடன் சேர்த்து அந்த நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 41 ஆயிரத்து 151 ஆக அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் மேலும் 93 பேர் உயிரிழந்துவிட்டதால் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,166 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் புதிதாக 327 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருப்பதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 லட்சத்து 37 ஆயிரத்து 404 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய இத்தாலியில் தற்போது நிலைமை மெல்ல கட்டுக்குள் வருகிறது. அங்கு கொரோனாவால் உயிரிழந்தவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பெர்கமோ என்ற இடத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இத்தாலி அதிபர் செர்ஜியோ மட்டரெல்லா,  முன்னிலையில் நினைவிடத்தில் பூங்கொத்து வைத்து துக்கம் அனுசரிக்கப்பட்டது. உலகளவில் கொரோனா பாதிப்பில் 2ம் இடத்தில் உள்ள பிரேசிலில் புதிதாக 216 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 லட்சத்து 45 ஆயிரத்து 470 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 215 நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது வரை 1 கோடியே 2 லட்சத்து 75 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையும் 5 லட்சத்து 4 ஆயிரத்து 400 ஆக அதிகரித்துவிட்டது.

மூலக்கதை