பாதிப்பில் 2-வது இடத்திற்கு முன்னேறிய தமிழகம்: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.66 லட்சத்தை தாண்டியது; 16,890 பேர் பலி

தினகரன்  தினகரன்
பாதிப்பில் 2வது இடத்திற்கு முன்னேறிய தமிழகம்: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.66 லட்சத்தை தாண்டியது; 16,890 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 66 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,66,840-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 18,522 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 418 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 16,890 பேர் உயிரிழந்த நிலையில் 3,34,822 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,69,883 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 7,610 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 88,960 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தமிழகத்தில் 86,224 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,141 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 47,749 பேர் குணமடைந்துள்ளனர்.  டெல்லி 2-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 85,161 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 2,680 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 56,235 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.மாநில வாரியாக விவரம்:அசாமில் 7,752 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 5,333 பேர் குணமடைந்தது.பீகாரில் 9,640 பேருக்கு பாதிப்பு; 62 பேர் பலி; 7,390 பேர் குணமடைந்தது.சண்டிகரில் 435 பேருக்கு பாதிப்பு; 6 பேர் பலி; 349 பேர் குணமடைந்தது.சத்தீஸ்கரில் 2,761 பேருக்கு பாதிப்பு; 13 பேர் பலி; 2,173 பேர் குணமடைந்தது.கோவாவில் 1,198 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 478 பேர் குணமடைந்தது.குஜராத்தில் 31,938 பேருக்கு பாதிப்பு; 1827 பேர் பலி; 23,240 பேர் குணமடைந்தது.அரியானாவில் 14,210 பேருக்கு பாதிப்பு; 232 பேர் பலி; 9,502 பேர் குணமடைந்தது.திரிபுராவில் 1,380 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 1,085 பேர் குணமடைந்தது.கேரளாவில் 4,189 பேருக்கு பாதிப்பு; 22 பேர் பலி; 2,152 பேர் குணமடைந்தது.ராஜஸ்தானில் 17,660 பேருக்கு பாதிப்பு; 405 பேர் பலி; 13,618 பேர் குணமடைந்தது.ஜார்கண்டில் 2,426 பேருக்கு பாதிப்பு; 15 பேர் பலி; 1,845 பேர் குணமடைந்தது.லடாக்கில் 964 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 616 பேர் குணமடைந்தது.மணிப்பூரில் 1,227 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 494 பேர் குணமடைந்தது.மேகலாயாவில் 47 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 42 பேர் குணமடைந்தது.மிஸ்ரோமில் 148 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 55 பேர் குணமடைந்தது.நாகாலாந்தில் 434 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 168 பேர் குணமடைந்தது.ஒடிசாவில் 6,859 பேருக்கு பாதிப்பு; 23 பேர் பலி; 4,946 பேர் குணமடைந்தது.பாண்டிச்சேரி 619 பேருக்கு பாதிப்பு; 10 பேர் பலி; 221 பேர் குணமடைந்தது.பாஞ்சாப்பில் 5,418 பேருக்கு பாதிப்பு; 138 பேர் பலி; 3,764 பேர் குணமடைந்தது.உத்தரகாண்ட்டில் 2831 பேருக்கு பாதிப்பு; 39 பேர் பலி; 2,111 பேர் குணமடைந்தது.கர்நாடகாவில் 14,295 பேருக்கு பாதிப்பு; 226 பேர் பலி; 7,683 பேர் குணமடைந்தது.ஜம்மு காஷ்மீரில் 7,237 பேருக்கு பாதிப்பு; 95 பேர் பலி; 4,585 பேர் குணமடைந்தது.தெலுங்கானாவில் 15,394 பேருக்கு பாதிப்பு; 253 பேர் பலி; 5,582 பேர் குணமடைந்தது.மேற்கு வங்கத்தில் 17,907 பேருக்கு பாதிப்பு; 653 பேர் பலி; 11,719 பேர் குணமடைந்தது.உத்தரப்பிரதேசத்தில் 22,828 பேருக்கு பாதிப்பு; 672 பேர் பலி; 15,506 பேர் குணமடைந்தது.ஆந்திரப்பிரதேசத்தில் 13,891 பேருக்கு பாதிப்பு; 180 பேர் பலி; 6,232 பேர் குணமடைந்தது.அருணாச்சலப்பிரதேசத்தில் 187 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 61 பேர் குணமடைந்தது.மத்தியப்பிரதேசத்தில் 13,370 பேருக்கு பாதிப்பு; 564 பேர் பலி; 10,199 பேர் குணமடைந்தது.இமாச்சலப்பிரதேசத்தில் 942 பேருக்கு பாதிப்பு; 9 பேர் பலி; 556 பேர் குணமடைந்தது.அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 90 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 46 பேர் குணமடைந்தது.தாதர் நகர் ஹவேலியில் 203 பேருக்கு பாதிப்பு; 77 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.சிக்கிமில் 88 பேருக்கு பாதிப்பு; 50 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.

மூலக்கதை