வந்ததா கொரோனா தடுப்பூசி ? முதல் முறையாக இந்தியாவில் covaxin தடுப்பூசியை மனிதர்களிடம் சோதனை செய்ய ஒப்புதல்..!!

தினகரன்  தினகரன்
வந்ததா கொரோனா தடுப்பூசி ? முதல் முறையாக இந்தியாவில் covaxin தடுப்பூசியை மனிதர்களிடம் சோதனை செய்ய ஒப்புதல்..!!

டெல்லி: இந்தியாவில் கொரோனாவை தடுக்க முதல் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. covaxin தடுப்புசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. விலங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் நல்ல பலன் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  ஜூலை முதல் மனிதர்களிடம் தடுப்பூசியை சோதனை செய்ய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பல்வேறு நாடுகள் கொரோனாவுக்கு தடுப்பூசி மற்றும் மருந்துகள் கண்டுப்பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.08 லட்சத்தை தாண்டியது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டது.தற்போது அனைத்து நாடுகளில் பரவி பெரும் நாசத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, இந்தியா, பிரேசில், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்துக்கொணடே உள்ளது. ஆனால் கொரோனாவுக்கு இதுவரை தடுப்பூசி கண்டுப்பிடிக்கவில்லை. பல நாடுகள் தடுப்பூசிகள் கண்டுப்பிடித்தும் பலன் தரவில்லை. இதுவரை மருந்துகள் மற்றும் மாத்திரைகள் கொண்டு கொரோனா நோயாளிகளை மருத்துவர்கள் குணப்படுத்தி வருகின்றனர்.மருந்து, மாத்திரை கொண்டு உயிரிழப்பை தடுக்க முடிகிறதே தவிர பாதிப்பை குறைக்க முடியவில்லை. உலகம் முழுவதும் மின்னல் வேகத்தில் பரவி கொண்டிருக்கிறது. சில நாடுகளில் பெரும் நாசத்தை ஏற்படுத்தி தற்போது சற்று குறைந்து காணப்படுகிறது. பல நாடுகளில் பாதிப்பு அதிகரித்து கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில்  முதல் முறையாக தடுப்பூசி மனிதர்களிடம் சோதனை செய்ய இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை