தென் ஆப்ரிக்க அணிக்கு அனுமதி | ஜூன் 29, 2020

தினமலர்  தினமலர்
தென் ஆப்ரிக்க அணிக்கு அனுமதி | ஜூன் 29, 2020

ஜோகனஸ்பர்க்: தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர்கள் பயிற்சிகளை துவக்க, அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியது.

தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க கடந்த பிப்., மாதம் இந்தியா வந்தது. கொரோனா பரவல் வேகம் எடுத்த தொடர் ரத்தானது. தென் ஆப்ரிக்க வீரர்கள் நாடு திரும்பினர்.

இங்கும் கொரோனா அதிகரிக்கத் துவங்க, கடந்த மார்ச் 15ம் தேதி முதல் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளும் தென் ஆப்ரிக்காவில் நிறுத்தப்பட்டன. கடந்த 27ம் தேதி, மூன்று அணிகள் மோத இருந்த காண்காட்சி போட்டி துவங்க இருந்தது/

ஆனால் அரசின் அனுமதி இல்லாததால் இது ரத்து செய்யப்பட்டது. தற்போது தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர்கள் பயிற்சிகளை துவங்க விளையாட்டு அமைச்சகம் அனுமதி கொடுத்தது. இதனால் இலங்கை, விண்டீஸ் அணிகளுக்கு எதிரான தொடர்களில் தென் ஆப்ரிக்க அணி பங்கேற்கும் என நம்பப்படுகிறது.

மூலக்கதை