ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் அருகே வாகாமாவில் துப்பாக்கி சண்டை..! 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

தினகரன்  தினகரன்
ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் அருகே வாகாமாவில் துப்பாக்கி சண்டை..! 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

அனந்த்நாக்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் அருகே வாகாமாவில் துப்பாக்கி சண்டையின் போது 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகாமா பிஜ்பெஹாராவில்  போலீசார், பாதுகாப்பு படையினருக்கு எதிராக பயங்கரவாதிகள் தாக்குதால் நடத்தினர். அப்போது பாதுகாப்பு படையினரால் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர் என்று தில்பாக் சிங் அறிவித்துள்ளார். 3 நாட்களுக்கு முன்னதாக பிஜ்பெஹாராவில் இருந்து 5 வயது சிறுவன் வெளியேற்றப்பட்டார் என்று டைரக்டர் ஜெனரல் தில்பாக் சிங் கூறியுள்ளார்.நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் பாதுகாப்புபடையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஊரடங்கால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக தீவிரவாத ஊடுருவல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் குல்ச்சோகர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, குல்ச்சோகர் பகுதியில்  பாதுகாப்புபடையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்புபடையினர் நடத்திய தாக்குதலில் அடையாளம் தெரியாத 3 தீவிரவாதிகள்  பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்த தீவிரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் போலீசாரும் பாதுகாப்பு படையினரும், இணைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். மேலும் தேடுதல் வேட்டையில் போலீசார் மற்றும் பாதுகாப்பு  படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

மூலக்கதை