குடும்ப வறுமையை போக்க அபுதாபி சென்ற தொழிலாளி கொரோனாவால் பலி: தன்னார்வ அமைப்பினர் இறுதிச்சடங்கு

தினகரன்  தினகரன்
குடும்ப வறுமையை போக்க அபுதாபி சென்ற தொழிலாளி கொரோனாவால் பலி: தன்னார்வ அமைப்பினர் இறுதிச்சடங்கு

திருமலை: தெலங்கானாவின் கரீம்நகர் மாவட்டம்,  சோபாதண்டியைச் சேர்ந்தவர் கொண்டய்யா. இவர் குடும்ப கஷ்டம் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் அபுதாபிக்கு வேலைக்காக சென்றார். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 3 மாதங்களாக அரசு முகாமில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் கொண்டய்யா உயிரிழந்தார். இதுகுறித்து அந்நாட்டு அரசு கொண்டய்யா உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தது. மேலும் அபுதாபி போலீசார் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த கொண்டய்யா உடலை இந்தியாவிற்கு அனுப்ப முடியாது. இங்கே தான் அடக்கம் செய்ய முடியும் என தெரிவித்தனர். இதையடுத்து, தன்னார்வ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்  ரமேஷ், ஷார்ஜா அஜ்மான் ஒருங்கிணைப்பாளர் ரவி டேவிட் உரிய ஆவணங்களை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். மேலும், இந்திய தூதரகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், இஸ்லாமிய முறைப்படி அபுதாபி பனியாஸ் கல்லறையில் கொண்டய்யாவின் சகோதரர் மகன் நாகராஜ் முன்னிலையில் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டது.

மூலக்கதை