மகாராஷ்டிராவில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிராவில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

மும்பை: நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இங்கு அசுர வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. தானே, கல்யாண் - டோம்பிவிலி, புனே என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில் நேற்று மட்டும் 5 ஆயிரத்து 493 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதுவரை மாநிலத்தில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 626 பேரை கொரோனா தாக்கி உள்ளது. நேற்று 2 ஆயிரத்து 330 பேர் குணமடைந்து உள்ளனர். இதேபோல மகாராஷ்டிராவில் நேற்று மேலும் 156 பேர் கொரானாவுக்கு பலியாகினர். இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 429 ஆகி உள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து அங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. 5வது கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், மேலும், அதிரடியாக ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை