ராகுல் மீது பாஜ எம்பி தாக்கு வெளிநாட்டினரின் மகன் தேசபக்தராக இருக்கமுடியாது

தினகரன்  தினகரன்
ராகுல் மீது பாஜ எம்பி தாக்கு வெளிநாட்டினரின் மகன் தேசபக்தராக இருக்கமுடியாது

போபால்: வெளிநாட்டவருக்கு பிறந்தவர், தேசபக்தராக இருக்க முடியாது என பாஜ எம்பியான பிரக்யா தாகூர் மறைமுகமாக ராகுல் காந்தியை விமர்சித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் போபால் பாஜ எம்பி. பிரக்யா தாகூர். இவர் சர்ச்சை கருத்துக்களுக்கு பிரபலமானவர். மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். இதனால் கட்சியின் தலைமையால் கண்டிக்கப்பட்டு சிறிது காலம் அமைதியாக இருந்தார். தற்போது மீண்டும் அவர் தன்னுடைய சர்ச்சை கருத்துகளை கூற தொடங்கி உள்ளார். பிரக்யா தாகூர் தற்போது மறைமுகமாக காங்கிரஸ் தலைவர் முன்னாள் ராகுல் காந்தியை விமர்சித்துள்ளார். நேற்று முன்தினம் பேசிய பிரக்யா தாகூர், “வெளிநாட்டைச் சேர்ந்த பெண்ணின் வயிற்றில் பிறந்த மகன் தேசபக்தராக இருக்க முடியாது. இந்த மண்ணின் மைந்தர்கள் தான் தாய்மண்ணை பாதுகாக்க முடியும் என்று சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். இருநாட்டின் குடியுரிமை பெற்றவர்களிடமிருந்து தேசபக்தியை எதிர்பார்க்க முடியாது” என்றும் கூறியுள்ளார்.

மூலக்கதை