தேவயானியின் இனிய அனுபவம்!

தினமலர்  தினமலர்
தேவயானியின் இனிய அனுபவம்!

தான் நடித்த, 'கொரோனா' விளம்பரப் படம் குறித்து, நடிகை தேவயானி கூறியதாவது:நெருக்கடியான கொரோனா காலத்தில், எங்களை போன்ற கலைஞர்கள், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது, அது மிக வேகமாக, அனைவரிடமும் சென்றடைகிறது.இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த முதல்வருக்கு நன்றி. இந்த விளம்பரப் படம், ஒரு தந்தை, மகளுக்கான பாசப்பிணைப்போடு அமைந்து உள்ளது.இ.வி.கணேஷ் பாபு, இந்த விளம்பரத்தை எழுதி, இயக்கி இருக்கிறார். ஊரடங்கு காலகட்டத்தில், என் குடும்பத்தோடு, அந்தியூர் அருகிலுள்ள, எண்ணமங்கலம் கிராமத்தில் வசிக்கிறேன். அரசு அனுமதியோடு, சென்னை வந்து, 'டிவி' தொடர்களில் நடித்து சென்றிருக்கிறேன். கிராமங்களின் வாழ்க்கையை, முழுமையாக நான் இப்போது அனுபவித்து வருகிறேன்.தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவது, கிராமத்து சமையல், தினமும் இரவு நேரத்தில், என் மூத்த மகள் பகவத்கீதை வாசிக்க, அதை நாங்கள் குடும்பத்தோடு கேட்பது, குழந்தைகளுக்கான கல்வி, இப்படி வாழ்க்கையின் அர்த்தங்களை, முழுமையாக செயல்படுத்தி வருகிறோம்.நல்ல தரமான படங்களுக்காக, கதாபாத்திரத்துக்காக காத்திருக்கிறேன்; தொடர்ந்து நடிப்பேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை