குவாரன்டைனில் பாக். வீரர்கள்

தினகரன்  தினகரன்
குவாரன்டைனில் பாக். வீரர்கள்

வொர்செஸ்டர்ஷையர்: இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக சென்றுள்ள பாகிஸ்தான் அணி வீரர்கள் 2 வாரத்துக்கு தனிமைப்படுத்தப்பட்டனர். கேப்டன் அசார் அலி தலைமையில் 20 வீரர்கள் உட்பட 31 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி சிறப்பு விமானத்தில் வொர்செஸ்டர்ஷையருக்கு சென்றுள்ளது. அங்கு தனிமனித இடைவெளியுடன் விமானநிலையத்தில் இருந்து தங்குமிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு  வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் என 31 பேருக்கும்  மீண்டும் கொரோனா பரிசோதனை நடைபெறும்.  இங்கிலாந்து செல்ல இருந்த பாகிஸ்தான் வீரர்களில்  6 பேருக்கு 2வது முறை சோதனையின் போதும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும்  இங்கு வந்தால் அவர்களுக்கும் சோதனை செய்யப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பீதி காரணமாகதான் வழக்கமாக 15, 16 வீரர்களுடன் செல்லும் நாடுகள் இந்தமுறை மாற்று வீரர்களை கூடுதல் எண்ணிக்கையில் அழைத்துச் சென்றுள்ளன. யாருக்காவது கொரோன தொற்று ஏற்பட்டால்  சமாளிக்கதான் இந்த ஏற்பாடு.வெஸ்ட் இண்டீஸ் 25 வீரர்களுடன் செல்ல, பாகிஸ்தான் 20 வீரர்களுடன் சென்றுள்ளது. அதிலும் பாக். முதலில் 29 வீரர்கள் என்று அறிவித்திருந்தது. இங்கிலாந்து பயணத்திற்கு முன்பு நடந்த சோதனையில் 7 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் இங்கிலாந்துக்கு அனுப்பப்படவில்லை.இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளிடையே 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடக்க உள்ள

மூலக்கதை