எனக்கு எதுவும் தெரியாது * கவாஸ்கர் புலம்பல் | ஜூன் 29, 2020

தினமலர்  தினமலர்
எனக்கு எதுவும் தெரியாது * கவாஸ்கர் புலம்பல் | ஜூன் 29, 2020

புதுடில்லி: ‘‘விண்டீஸ் தொடரில் வெற்றி பெற்ற பின்பும் ஏன் என்னை கேப்டன் பதவியில் இருந்து நீக்கினர் எனத் தெரியவில்லை,’’ என கவாஸ்கர் தெரிவித்தார்.

இந்திய அணி முன்னாள் கேப்டன் கவாஸ்கர் 70. இவரது தலைமையில் 1978–79ல் விண்டீஸ் சென்ற இந்திய அணி, ஆறு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1–0 என கைப்பற்றியது. இருப்பினும், நாடு திரும்பியதும் கவாஸ்கர் நீக்கப்பட்டு, வெங்கட்ராகவன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதுகுறித்து தற்போது கவாஸ்கர் கூறுகையில்,‘‘ விண்டீஸ் தொடரில் கோப்பை வென்றோம். நான் 700 ரன்கள் குவித்தேன். ஆனால் என்னை கேப்டன் பதவியில் இருந்து நீக்கினர். இன்றுவரை இதற்கான காரணம் என்ன எனத் தெரியவில்லை. அதேநேரம் கெர்ரி பாக்கர் உலக கிரிக்கெட் தொடரில் சேர்வது குறித்து அப்போது வெளிப்படையாக கருத்து தெரிவித்தேன். இது கூட காரணமாக இருக்கலாம் என யோசித்தேன்,’’ என்றார்.

மூலக்கதை