இங்கிலாந்து மண்ணில் பாக்., அணி | ஜூன் 29, 2020

தினமலர்  தினமலர்
இங்கிலாந்து மண்ணில் பாக்., அணி | ஜூன் 29, 2020

மான்செஸ்டர்: டெஸ்ட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சென்று சேர்ந்தது.

இங்கிலாந்து மண்ணில் பாகிஸ்தான் அணி, மூன்று டெஸ்ட் (ஆக. 5–9, 13–17, 21–25), மூன்று ‘டுவென்டி–20’ (ஆக. 28, 30, செப். 1) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்காக 20 வீரர்கள் அடங்கிய பாகிஸ்தான் அணியினர் கராச்சியில் கிளம்பினர்.

நேற்று பாகிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்தின் மான்செஸ்டர் சென்றடைந்தனர். இங்கு அனைவருக்கும் கொரோனா சோதனை நடந்தது. அடுத்து சற்று ‘ரிலாக்ஸ்’ ஆன பின், வீரர்கள் டேபிள் டென்னிஸ், ஸ்னுாக்கர் உள்ளிட்ட உள்ளரங்க விளையாட்டுகள் விளையாடினர்.

இவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளனர். இதன் பின் வீரர்கள் பயிற்சிகளை துவங்குவர்.

பெயர் தவறு

இதனிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘பாகியதான் அணி இங்கிலாந்து கிளம்பி சென்றது. போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள்,’ என தெரிவித்தது. இதில் பாகிஸ்தான் பெயரை தவறாக குறிப்பிட்டது ரசிகர்களிடம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. ஒரு மணி நேரம் கழித்து இந்த தவறு சரி செய்யப்பட்டது.

மூலக்கதை