சிங்கப்பூரில் மேலும் 202 பேருக்கு கொரோனா

தினமலர்  தினமலர்
சிங்கப்பூரில் மேலும் 202 பேருக்கு கொரோனா

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இன்று புதிதாக 202 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.


கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சிங்கப்பூரிலும் நோய் பாதிப்பு சற்று கூடுதலாக உள்ளது. சிங்கப்பூரில் கொரோனா தொற்றுக்கு (இன்று) நிலவரப்படி, 202 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். நாட்டில் மொத்தமாக 43,661 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.


பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் என்பது தெரிய வந்தது. இதுவரை 26 பேர் பலியாகினர். சிங்கப்பூரில் நோய் தொற்றில் இருந்து 37,508 பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

மூலக்கதை