நிர்வாண போஸ்டரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய அல்லரி நரேஷ்

தினமலர்  தினமலர்
நிர்வாண போஸ்டரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய அல்லரி நரேஷ்

இந்த கொரோனா காலகட்ட்ததிலும் கூட தங்களது படத்தின் புரமோஷன் வேலைகளை ஒரு சில நட்சத்திரங்கள் செய்துகொண்டுதான் இருக்கின்றனர். அந்தவகையில் தெலுங்கு சினிமாவின் ஹீரோ, -காமெடி நடிகரான அல்லரி நரேஷ், தற்போது தான் நடித்துவரும் 'நாந்தி' என்கிற படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.. தமிழில் சமுத்திரக்கனி இயக்கிய போராளி படத்தில் சசிகுமாரின் நண்பராக நடித்தவர் தான் இந்த அல்லரி நரேஷ்.

தற்போது இவர் வெளியிட்டுள்ள போஸ்டரில் கிட்டத்தட்ட 90 சதவீதம் நிர்வாண கோலத்தில் இவர் அமர்ந்திருக்கும் காட்சி பரபரப்பை கிளப்பியுள்ளது. நாளை (ஜூன்-30) இந்தப்படத்தின் முதல் தாக்கத்தை எதிர்பாருங்கள் என்றும் அவர் சூசகமாக குறிப்பிட்டுள்ளார். அல்லரி நரேஷ் கடைசியாக நடித்த சில படங்கள் தோல்வி அடைந்ததால், இந்தப்படத்தைத்தான் மலைபோல நம்பி இருக்கிறாராம். இந்தப்படத்தில் கதாநாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை