திறமை தான் ஜெயிக்கும் - கீர்த்தி சுரேஷ்

தினமலர்  தினமலர்
திறமை தான் ஜெயிக்கும்  கீர்த்தி சுரேஷ்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் சினிமாவில் உள்ள பிரபல வாரிசு நட்சத்திரங்களின் ஆதிக்கத்தால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு இந்தி சினிமாவில் மட்டுமல்ல, மற்ற மொழி திரையுலகங்களிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வாரிசு நடிகர்களாக இருந்தாலும் தங்களது திறமையால் முன்னேறிய பல நட்சத்திரங்களுக்கு இதனால் சங்கடம் ஏற்பட்டுள்ளது. மற்றவர்கள் நடிக்க ஆசைப்பட்டு சினிமாவுக்கு வருவதுபோலத்தானே நாங்களும் வருகிறோம் இதில் என்ன தவறு என அவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து சமீபத்தில் கூறியுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், “என் பெற்றோர் சினிமாவை சேர்ந்தவர்கள் தான். என் முதல் பட வாய்ப்பு இயக்குனர் பிரியதர்ஷன் மூலமாக வந்தது. அந்த அறிமுகம் கிடைக்க என் பெற்றோர் தான் காரணம்.. அதன்பிறகு எனக்கு வந்த வாய்ப்புகள் என் நடிப்பை பார்த்தே தேடி வந்தன. என்ன தான் வாரிசு நடிகராக இருந்தாலும் திறமை இருந்தால் மட்டும் தான் தொடர்ந்து திரையுலகில் நீடிக்க முடியும்.. திறமை தான் இறுதியில் ஜெயிக்கும்” என கூறியுள்ளார்.

மூலக்கதை