ஆப்கனில் நடந்த ராக்கெட் தாக்குதலில் 23 பேர் பலி

தினமலர்  தினமலர்
ஆப்கனில் நடந்த ராக்கெட் தாக்குதலில் 23 பேர் பலி

காபூல்: ஆப்கன் ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடந்த ராக்கெட் மற்றும் சிறு பீரங்கிக் குண்டு தாக்குதலில் குழந்தைகள் உட்பட 23 பேர் பலியானார்கள்

அம்மாகாணத்தின் சாங்கின் மாவட்டத்தில் உள்ள ஒரு பரபரப்பான கால்நடை சந்தைப்பகுதியில் 4 ராக்கெட்டுகள் விழுந்து வெடித்தன அதே நேரம் பீரங்கிக் குண்டுகளும் வெடித்ததாக கூறப்படுகிறது.


இந்த தாக்குதலுக்கு தாலிபான்களும், ஆப்கன் படைகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டி உள்ளன. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. நாட்டின் மிகவும் உள்ளடங்கிய பகுதியில் இந்த மாவட்டம் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

மூலக்கதை