சீனாவின் ஏகாதிபத்திய ஆட்சியை கண்டித்து ஜப்பானில் மனித உரிமை அமைப்புகள் போராட்டம்

தினமலர்  தினமலர்
சீனாவின் ஏகாதிபத்திய ஆட்சியை கண்டித்து ஜப்பானில் மனித உரிமை அமைப்புகள் போராட்டம்

டோக்கியோ: சீனாவின் ஏகாதிபத்திய ஆட்சி முறையை கண்டித்து ஜப்பானில் மனித உரிமை அமைப்பினைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உலகம் முழுவதும் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் அது பரவுவதற்கு காரணமாக இருந்த சீனா இந்தியாவுடன் எல்லையில் தகராறு செய்ததுடன் ஜப்பானின் செங்காரு தீவுக்கும் உரிமை கொண்டாடுகிறது.


ஹாங்காங்கில் ஜனநாயகத்தை ஒடுக்கும் சீனாவின் முயற்சிகளும் சேர்ந்து சீனாவை சர்வதேச சர்ச்சை மையப்புள்ளியாக மாற்றி உள்ளது. இந்நிலையில் ஏகாதிபத்திய ஆட்சியை நடத்தும் ஷி ஜின்பிங்கிற்கு எதிராக ஜப்பான், இந்தியா, தைவான் மற்றும் திபெத்தைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூலக்கதை