வரி சலுகை முதலீடு குழப்பத்திற்கு தீர்வு

தினமலர்  தினமலர்
வரி சலுகை முதலீடு குழப்பத்திற்கு தீர்வு

வரிச்சலுகை முதலீடு மேற்கொள்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சலுகை காலத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடு, எந்த நிதிஆண்டில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் எனும் சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.


வரி தாக்கல் செய்பவரே இதை தீர்மானித்துக் கொள்ளலாம்.வழக்கமாக, மார்ச் மாதத்துடன் நிதியாண்டு முடிவடையும். நிதியாண்டிற்கான வரிச்சலுகை முதலீட்டை அதற்கு முன் மேற்கொள்ள வேண்டும். கொரோனா பாதிப்பு காரணமாக, வரிச்சலுகை மேற்கொள்வதற்கான அவகாசம் இரு முறை நீட்டிக்கப்பட்டு, ஜூலை மாத இறுதி வரை காலம் அளிக்கப்பட்டுள்ளது.


எனினும், ஜூலை மாதம் என்பது அடுத்த நிதியாண்டில் வருவதால், இந்த காலத்தில் மேற்கொள்ளும் முதலீடு, கடந்த நிதியாண்டில் பொருந்துமா? அல்லது அடுத்த நிதியாண்டிற்கு உரியதா? எனும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

முதலீட்டை எந்த நிதியாண்டிற்கு வேண்டுமானால் மேற்கொள்ளலாம் என்றும், வரித் தாக்கல் செய்யும் போது, கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த நிதியாண்டை அல்லது அதற்கு அடுத்த நிதியாண்டை வரித் தாக்கல் செய்பவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என, வல்லுனர்கள் கூறுகின்றனர்.முதலீடு பொருந்தும் ஆண்டை தேர்வு செய்து கொள்ளலாம் என்றாலும், ஏதேனும் ஒரு நிதியாண்டிற்கே இது பொருந்தும் என்றும் விளக்கம் அளிக்கின்றனர்.

மூலக்கதை