பவுலர்களை கட்டுப்படுத்தினாரா தோனி: என்ன சொல்கிறார் இர்பான் பதான் | ஜூன் 28, 2020

தினமலர்  தினமலர்
பவுலர்களை கட்டுப்படுத்தினாரா தோனி: என்ன சொல்கிறார் இர்பான் பதான் | ஜூன் 28, 2020

புதுடில்லி: ‘‘தோனி கேப்டனாக பொறுப்பேற்ற போது பவுலர்களை கட்டுப்படுத்தினார். பின், அவர்கள் மீது நம்பிக்கை வைத்தார்,’’ என, இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 38. இவரது தலைமையிலான இந்திய அணி, 2007ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை மற்றும் 2013ல் சாம்பியன்ஸ் டிராபி வென்றது. இவ்விரு அணியிலும் ‘ஆல்–ரவுண்டர்’ இர்பான் பதான் 35, இடம் பெற்றிருந்தார்.

தோனியின் தலைமை குறித்து இர்பான் பதான் கூறியது: கடந்த 2007ல் முதன்முறையாக இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற தோனி மிகவும் உற்சாகமடைந்தார். இதனால் அப்போது பவுலர்களை கட்டுப்படுத்த முயன்றார். விக்கெட் கீப்பர் பகுதியில் இருந்து, பவுலர்களிடம் ஓடி வந்து எப்படி பந்துவீச வேண்டும் என ஆலோசனை வழங்குவார்.

ஆனால் 2013ல் சிறந்த அனுபவம் பெற்ற இவர், பவுலர்களை சுயமாக முடிவு எடுத்துக் கொள்ள விட்டுவிட்டார். அதன்பின் அமைதியானார். மித வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ‘சுழல்’ வீரர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்தார். போட்டியில் முக்கியமான நேரங்களில் சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி அணியை வெற்றி பெறச் செய்தார். இவரது தலைமையில் வீரர்கள் கூட்டம் வெறும் 5 நிமிடம் மட்டுமே நடத்தப்படும். இதில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

இவ்வாறு இர்பான் பதான் கூறினார்.

மூலக்கதை