ஐ.பி.எல்., தொடர் நடக்குமா?: புவனேஷ்வர் குமார் எதிர்பார்ப்பு | ஜூன் 28, 2020

தினமலர்  தினமலர்
ஐ.பி.எல்., தொடர் நடக்குமா?: புவனேஷ்வர் குமார் எதிர்பார்ப்பு | ஜூன் 28, 2020

புதுடில்லி: ‘‘நிதி காரணங்களுக்காக ஐ.பி.எல்., தொடர் நிச்சயம் நடத்தப்படும்,’’ என, புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், 13வது இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சீசன் கடந்த மார்ச் 29ல் துவங்க இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஒருவேளை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை (அக். 18 – நவ. 15) ஒத்திவைக்கப்பட்டால், இத்தொடர் நடத்தப்படலாம்.

இதுகுறித்து இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் கூறுகையில், ‘‘இந்த ஆண்டு ஐ.பி.எல்., தொடர் நிச்சயம் நடத்தப்படும். ஏனெனில் மீண்டும் கிரிக்கெட் துவங்குவதற்கும், நிதி பிரச்னையை சமாளிக்கவும் இத்தொடரை நடத்துவது அவசியம். போட்டியில் பந்தை பளபளப்பாக்க எச்சிலுக்கு பதிலாக செயற்கையான பொருள் ஒன்றை பயன்படுத்துவது குறித்து ஐ.சி.சி., நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறேன். விரைவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறேன்,’’ என்றார்.

மூலக்கதை