இனவெறி கருத்துக்கு நடவடிக்கை: ஜேசன் ஹோல்டர் வலியுறுத்தல் | ஜூன் 28, 2020

தினமலர்  தினமலர்
இனவெறி கருத்துக்கு நடவடிக்கை: ஜேசன் ஹோல்டர் வலியுறுத்தல் | ஜூன் 28, 2020

மான்செஸ்டர்: ‘‘ஊக்க மருந்து பயன்படுத்தல், ‘மேட்ச் பிக்சிங்’ போன்ற குற்றங்களுக்கு வழங்கும் தண்டனை, இனவெறியுடன் பேசும் வீரர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்,’’ என, ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் போலீஸ் தாக்குதலில் கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து கிரிக்கெட்டில் அரங்கேறிய இனவெறி சம்பவங்கள் வெளியாகின்றன.

இதுகுறித்து விண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் கூறியது: கிரிக்கெட்டில், வீரர்களை இனவெறியுடன் பேசுவதற்கும், ‘மேட்ச் பிக்சிங்’ சூதாட்டம், ஊக்க மருந்து பயன்படுத்துவது போன்ற குற்றங்களில் ஈடுபடுவதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன். இனவெறியுடன் பேசினால், இதுபோன்ற குற்றங்களுக்கு இணையாக கருத வேண்டும். ஐ.சி.சி., விதிமுறைப்படி ஒரு வீரர் முதன்முறையாக இனவெறி சர்ச்சையில் சிக்கினால், அவருக்கு 4 முதல் 8 அபராத புள்ளி வழங்கப்பட வேண்டும். மீண்டும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டால், வாழ்நாள் தடை விதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு தொடர் துவங்குவதற்கு முன், ஊக்க மருந்து குறித்தும், ஊழலுக்கு எதிரான விஷயங்கள் குறித்தும் வீரர்களுக்கு தெரிவிக்கப்படும். இதுபோல இனிவெறி குறித்த விழிப்புணர்வை வீரர்களிடம் தெரிவிக்க வேண்டும். இதன்மூலம் கிரிக்கெட்டில் இனவெறி பிரச்னை தடுக்கப்படும்.

இவ்வாறு ஹோல்டர் கூறினார்.

மூலக்கதை