உலகளவில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரிப்பு; ஒரு கோடிைய நெருங்கும் கொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 16,922 பேருக்கு தொற்று

தமிழ் முரசு  தமிழ் முரசு
உலகளவில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரிப்பு; ஒரு கோடிைய நெருங்கும் கொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 16,922 பேருக்கு தொற்று

வாஷிங்டன்: உலகளவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும்நிலையில், அது ஒரு கோடியை நெருங்கும் நிலையில் உள்ளது. இந்தியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 16,922 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,73,035 பேர் அதிகரித்து மொத்தம் 9,527,765 ஆக அதிகரித்துள்ளது. நாளை ஒரு கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,070 அதிகரித்து மொத்தம் 484,972 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,038 பேர் அதிகரித்து மொத்தம் 24,63,206 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.



மரணமடைந்தோர் எண்ணிக்கை 807 அதிகரித்து மொத்தம் 1,24,280 பேர் உயிர் இழந்துள்ளனர். இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,92,474 ஆகவும், மரணமடைந்தோர் எண்ணிக்கை 53,874  ஆகவும் உள்ளது.

மூன்றாமிடத்தில் உள்ள ரஷ்யாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,06,881 ஆகவும், பலி எண்ணிக்கை 8,513 ஆகவும் உள்ளது. நான்காமிடத்தில் உள்ள இந்தியாவை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சமாக 16,922 ஆக உயர்ந்து 4,72,985 ஆக உயர்ந்துள்ளது.

பலி எண்ணிக்கை 24 மணி நேரத்தில் 412 உயர்ந்து மொத்தமாக 14,907 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

ஒரே நாளில் 13,089 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,71,688 ஆக உள்ளது.   தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,86,335 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் 3,889 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,42,889 ஆக உள்ளது  நேற்று 208 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,739 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

டில்லியில் நேற்று 3,788 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 70,390 ஆகி உள்ளது.   நேற்று 64 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,365 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

.

மூலக்கதை