இந்தியாவில் 4.4 லட்சத்தை கடந்த நிலையில் கொரோனா பாதித்த 56% பேர் ‘குணம்’: மத்திய சுகாதார துறை தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியாவில் 4.4 லட்சத்தை கடந்த நிலையில் கொரோனா பாதித்த 56% பேர் ‘குணம்’: மத்திய சுகாதார துறை தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4. 4 லட்சத்தை கடந்த நிலையில், 56 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,933  பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,40,502 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 312 பேர் உயிரிழந்த நிலையில் மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 14,105 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 10,879 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,48,137 ஆக உள்ளது.

 

தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,78,247 பேராக உள்ளது. மகாராஷ்டிராவில் புதியதாக 3,721 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,35,796 ஆக உள்ளது.

113 பேர் உயிரிழந்த நிலையில் மொத்தம் 6,283 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,962 பேர் குணமடைந்து இதுவரை மொத்தம் 67,706 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டெல்லியில் 2,909 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 62,655 ஆகி உள்ளது.   இதில் நேற்று 58 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,233 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,589 பேர் குணமடைந்த நிலையில் மொத்தம் 36,602 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

பாதிப்பு பட்டியலில் 3ம் இடத்தில் உள்ள தமிழகத்தில் 2,710 பேருக்கு புதியதாக பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 62,087 ஆகி உள்ளது.

நேற்று 37 பேர் உயிர் இழந்து மொத்தம் 794 பேர் மரணம் அடைந்துள்ளனர்.   நேற்று மட்டும் 1,358 பேர் குணமடைந்து மொத்தம் 34,112 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். குஜராத் மாநிலத்தில் 563 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,880 ஆகி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் 591 பேருக்குப் புதியதாக பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,322 ஆகி உள்ளது. நேற்று 19 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 569 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு மத்தியில் மொத்தமாக 2,48,137 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 55. 77 சதவீதமாக உயர்ந்துள்ளதாக  சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

.

மூலக்கதை