சீன ெபாருட்களை புறக்கணிப்போம் என்ற கோஷத்தால் ஆண்டுக்கு ₹6.9 லட்சம் கோடி வர்த்தகம் என்னவாகும்?: இந்தியாவுக்கு ஆலோசனை கூறி கொக்கரிக்கும் சீன அரசின் ‘ஊதுகுழல்’

தமிழ் முரசு  தமிழ் முரசு
சீன ெபாருட்களை புறக்கணிப்போம் என்ற கோஷத்தால் ஆண்டுக்கு ₹6.9 லட்சம் கோடி வர்த்தகம் என்னவாகும்?: இந்தியாவுக்கு ஆலோசனை கூறி கொக்கரிக்கும் சீன அரசின் ‘ஊதுகுழல்’

புதுடெல்லி: ‘சீன ெபாருட்களை புறக்கணிப்போம்’ என்ற கோஷத்தால் இந்தியா - சீனா இடையில் ஆண்டுக்கு ₹6. 9 லட்சம் கோடி நடக்கும் வர்த்தகம் என்னவாகும்? என்றும், இந்தியாவுக்கு ஆலோசனை கூறும் வகையில் சீன அரசின் ‘ஊதுகுழல்’ பத்திரிகை ெசய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்னைகள் தொடர்பாக பல எல்லை மோதல்கள் இருந்தபோதிலும், இருதரப்பு வர்த்தகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மொத்த இருதரப்பு வர்த்தகம் 2019ம் ஆண்டில் 639. 5  பில்லியன் யுவான் (90 பில்லியன் டாலர் - இந்திய ரூபாயில் 6. 9 லட்சம் கோடி - ரூ. 68,94,97,21,50,560) ஆக இருந்தது. இது ஆண்டுக்கு 1. 6  சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவுக்கான சீனாவின் ஏற்றுமதி 515. 6  பில்லியன் யுவான், அதாவது 2. 1 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும் சீனாவிற்கான  இந்தியாவின் ஏற்றுமதி மொத்தம் 123. 9 பில்லியன் யுவான், அதாவது ஆண்டுக்கு  0. 2 சதவீதம் குறைந்துள்ளதாக சீனாவின் வர்த்தக பொது நிர்வாகத்தின்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்திய - சீன எல்லையான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில், இந்தியா தரப்பில் 20 வீரர்கள் சீனர்களால் கொல்லப்பட்டனர்.

ச்சம்பவத்தால் இருநாடுகளுக்கிடையிலான வர்த்தகம் பாதிக்கும் என்றும், சீன பொருட்களை புறக்கணிப்போம் என்ற கோஷமும் எழுந்துவருகிறது. நிலைமை இவ்வாறு இருக்க, சீன அரசாங்கத்தின் ஊதுகுழலாக இருக்கும் ‘குளோபல் டைம்ஸ்’ என்ற பத்திரிகை தற்போதைய விவகாரத்தை மையப்படுத்தி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது அதன் விபரம் வருமாறு: இந்திய அரசு உள்நாட்டு அதிருப்தியிலிருந்து கவனத்தை மாற்ற எல்லை மோதலைப் பயன்படுத்துகிறது.

சீன எதிர்ப்பு தேசியவாத சூழ்ச்சி இந்திய சந்தையில் சீன நிறுவனங்களின் செயல்பாடுகளைத் தணிக்க வாய்ப்பில்லை என்று சீன வணிக நிறுவன அதிபர்கள் தெரிவிக்கின்றனர். சீனப் பொருட்களைப் புறக்கணிப்பதன் மூலம் எழுந்த உணர்ச்சிபூர்வமான வெளிப்பாடு மூலம் இந்தியாவுக்கு எந்த நன்மையும் ஏற்படாது.

இந்தியா தனது தொழில்களை வளர்ப்பதில் சீனாவை அதிகம் நம்பியுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாடுகளின் எல்லைப் படையினருக்கும் இடையே வன்முறை மோதல்களுக்குப் பின்னர், சீன தயாரிப்புகளை புறக்கணிப்பதற்கான அழைப்புகள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன.

உள்ளூர் வர்த்தகர்களின் அமைப்பான அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஐஐடி), ‘சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும்.

உள்நாட்டுப் பொருட்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். இதற்காக இந்திய வர்த்தகர்கள் அணிதிரள வேண்டும்’ என்று இந்திய ஊடக அறிக்கைகள் மூலம் தெரியவருகிறது.

அதன்படி சிஐஐடி, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 500 வகை தயாரிப்புகளின் பட்டியலை வெளியிட்டது. இவற்றை (ஆடை, நுகர்வோர் மின்னணு மற்றும் பொம்மைகள்) இந்தியாவில் தயாரிக்கலாம் என்று ெதரிவித்துள்ளது.

எல்லை மோதலுக்குப் பின்னர் சீன ஸ்மார்ட்போன் விற்பனையாளர் ‘ஒப்போ’ தனது முதன்மை ஸ்மார்ட்போனின் நேரடி ஆன்லைன் அறிமுகத்தை ரத்து செய்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த நிறுவனம், ஃபைண்ட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போன் மாடல்களை ரத்து செய்யவில்லை என்று கூறியுள்ளது.

எல்லை மோதலால், இந்தியாவில் இதுவரை சீன வணிகம் பாதிக்கவில்லை. நீண்ட காலமாக இந்திய சந்தையில் இயங்கி வரும் சீன நிறுவனங்கள், ‘இது ஒரு பழைய தந்திரம்.

மூன்று மாதங்களுக்குள் புறக்கணிப்பு கோஷம் முடிவடையும்’ என்று தெரிவித்துள்ளது.

ஆனால் 2017ல் நடந்த டோக்லாம் நிலைப்பாட்டைப் போலன்றி, கல்வான் மோதல் சில உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே கொரோனா தொற்றுநோய் தொடர்ந்தால் இருதரப்பு உறவுகள் சிறிது பாதிக்கலாம். சீன வணிகங்கள் நீண்டகால இருதரப்பு பொருளாதார மற்றும் வணிக உறவுகள் குறித்து நேர்மறையான பார்வையைக் கொண்டுள்ளன.

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ‘அனைத்து சீன தயாரிப்புகளையும் தடை செய்ய வேண்டும்’ என்று அழைப்பு விடுத்துள்ளார். ஓய்வுபெற்ற இந்திய ராணுவ மேஜர் ரஞ்சித் சிங், ‘சீனப் பொருட்களை வெளியே எறிய வேண்டும்.

நாங்கள் சீனாவின் முதுகெலும்பை பொருளாதார ரீதியாக உடைக்க முடியும்’ என்று கூறினார்.
சீனாவிலிருந்து சுமார் 300 தயாரிப்புகளுக்கு அதிக வர்த்தக தடைகளை விதிக்கவும், இறக்குமதிக்கான வரிகளை அதிகரிக்கவும், நாட்டின் 4 ஜி நெட்வொர்க் மேம்படுத்தலில் சீன உபகரணங்களை மாற்ற இந்திய தயாரிப்புகளைப் பயன்படுத்தவும் இந்தியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவை இந்தியாவின் நீண்டகால திட்டங்களாக இருக்கலாம்.

ஆனால் சில ஊடகங்கள் இந்த திட்டங்களை இந்திய சமுதாயத்தின் சீன எதிர்ப்பு உணர்வை உயர்த்த பயன்படுத்தி வருகின்றன.

எல்லைப் பிரச்னையில் இந்திய துருப்புக்கள் மீறின. அவர்கள் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை (எல். ஐ. சி) அப்பட்டமாகக் கடந்து சீனப் படையினரின் கூடாரங்களை வலுக்கட்டாயமாக இடித்தனர்.

இது என்கவுன்டருக்கு வழிவகுத்தது. மேலும் இந்தியா பல உயிரிழப்புகளை சந்தித்தது.

சீனாவும் இந்தியாவும் எல். ஐ. சி பற்றி வெவ்வேறு புரிதல்களைக் கொண்டுள்ளன. எல்லை நிலைமையைக் கட்டுப்படுத்த, எந்த நாடும் முதலில் செயல்படக்கூடாது.

இந்திய துருப்புக்கள் இந்த ஒப்பந்தத்தை மீறின. இந்தியாவில் செயல்படும் சில தீவிர சக்திகள் ஒவ்வொரு ஆண்டும் சீன தயாரிப்புகளை புறக்கணிக்க அழைப்பு விடுக்கின்றன.

ஆனால் சீனா - இந்தியா வர்த்தகம் விரிவடைந்து வருகிறது. இந்தியா சீனாவிலிருந்து அதிகமான பொருட்களை இறக்குமதி செய்கிறது.

இது ஒவ்வொரு ஆண்டும் சீனாவுடன் இந்தியாவின் பல்லாயிரக்கணக்கான வர்த்தக பற்றாக்குறைக்கு வழிவகுக்கிறது. ஏனென்றால், பல சீன தயாரிப்புகளை இந்தியாவில் தயாரிக்க முடியாது.

இந்த தயாரிப்புகளை மேற்கு நாடுகளிலிருந்து குறைந்த விலையில் இந்தியா வாங்க முடியாது. உதாரணமாக, சீனாவை குறைகூறும் பல இந்தியர்கள் சீன மொபைல் போன்களைப் பயன்படுத்துகின்றனர்.

சீன விளக்குகள், மட்பாண்டங்கள் மற்றும் சூட்கேஸ்கள் இந்திய நுகர்வோருக்கு மிகவும் பொருத்தமானவை. குறைந்த விலை மற்றும் நல்ல தரத்துடன் சப்ளை செய்கிறோம்.சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்தியாவை விட ஐந்து மடங்கு அதிகம். இவ்வளவு இடைவெளி இருக்கும் நிலையில், ஒரு சிறிய பொருளாதாரத்திற்கு எப்படி ஒரு பெரிய பொருளாதாரத்தை அனுமதிப்பது? சீனா மீதான அமெரிக்காவின் தாங்கமுடியாத அணுகுமுறையை இந்தியா பிரதிபலிக்க முடியாது.

சீனாவுக்கு எதிராக வர்த்தகப் போரைத் தொடங்கினால், இந்தியா அதிக இழப்புகளை சந்திக்கும். மேலும் சீன தயாரிப்புகளை விரும்பும் இந்திய மக்கள், அதனை புறக்கணித்தால் அவர்களின் வாழ்வாதாரம் அதன் சுமைகளை சுமக்கும்.

சீனா மற்றும் இந்தியா இரண்டும் சூப்பர் அளவிலான வளரும் நாடுகள். இருநாடுகளின் பொருளாதாரங்களை வலுப்படுத்துவது மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது முக்கிய பணியாகும்.

எல்லைப் பிரச்னையில் தேசியவாத உணர்வை இந்தியா தூக்கிப் பிடித்தால், இருதரப்பு ஒத்துழைப்பில் பாதிப்பு ஏற்படுவது மட்டுமின்றி, இந்தியா தன்னைத்தானே பாதிப்புக்கு உள்ளாக்கிக் கொள்ளும்.

இந்தியா தற்போதைய கொரோனா பாதிப்பால் கடுமையான பொருளாதார ரீதியாக பலவீனமாக உள்ளது.

எல்லைப் பிரச்னைகளை அமைதியான முறையில் தீர்க்காமல் கடினமாக்கினால் அது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவின் உண்மையான நலன்கள் இருக்கும் இடத்தில் எல்லையிலும் அமைதி இருக்கும் என்று இந்திய வீரர்களிடம் சொல்லுங்கள்.

வீரர்கள் தைரியமாக இருப்பதை போல், அரசியல் ரீதியாக தெளிவான தலைவர்களாகவும், பரந்த பார்வை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அந்த கட்டுரையில் கூறியுள்ளது.

சீனா கூறும் ‘ஹைலைட்ஸ்’
« எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை (எல். ஐ. சி) அப்பட்டமாகக் கடந்து சீனப்  படையினரின் கூடாரங்களை இடித்தனர். இது என்கவுன்டருக்கு  வழிவகுத்தது.
« சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, இந்தியாவை விட ஐந்து மடங்கு அதிகம்.


« சீனா மீதான அமெரிக்காவின் தாங்கமுடியாத அணுகுமுறையை இந்தியா பிரதிபலிக்க முடியாது.
« இந்தியா தற்போதைய கொரோனா பாதிப்பால் கடுமையான பொருளாதார ரீதியாக பலவீனமாக உள்ளது.
« பெரும்பாலான சீன தயாரிப்புகளை  இந்தியாவில் தயாரிக்க முடியாது.

இந்தியா தனது தொழில்களை வளர்ப்பதில் சீனாவை அதிகம் நம்பியுள்ளது.
« இந்தியாவில் செயல்படும் சில தீவிர சக்திகள் ஒவ்வொரு ஆண்டும் சீன தயாரிப்புகளை புறக்கணிக்க அழைப்பு விடுக்கின்றன.
« சீனப் பொருட்களைப் புறக்கணிப்பதன் மூலம் எழுந்த உணர்ச்சிபூர்வமான வெளிப்பாடு மூலம் இந்தியாவுக்கு எந்த நன்மையும் ஏற்படாது.


« இந்திய அரசு உள்நாட்டு அதிருப்தியிலிருந்து கவனத்தை மாற்ற எல்லை மோதலைப் பயன்படுத்துகிறது.

.

மூலக்கதை