கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து படைகளை திரும்பப்பெறுகிறது சீனா; இந்தியா - சீனா எல்லை பிரச்சனையை தீர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தை...வெளியுறவுத்துறை தகவல்

தினகரன்  தினகரன்
கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து படைகளை திரும்பப்பெறுகிறது சீனா; இந்தியா  சீனா எல்லை பிரச்சனையை தீர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தை...வெளியுறவுத்துறை தகவல்

டெல்லி: லடாக் எல்லையில் இந்திய - சீன ராணுவங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலை தீர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் லடாக் எல்லையை ஒட்டிய பான்காங் சோ, கல்வான், டெம்சோக் பகுதிகளில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து, இந்திய கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து இந்தியாவும் அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ராணுவத்தை குவித்து வருகிறது. இதனால், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.இப்பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் (கிழக்கு ஆசியா பிரிவு) நவீன் ஸ்ரீவத்சவாவும், சீன வெளியுறவு அமைச்சகத்தின் இயக்குனர் ஜெனரல் வு ஜியாங்கோவும் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், எல்லைப் பிரச்னையை பற்றி நேரடியாக குறிப்பிடாத இருதரப்பும், பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்தன. இதற்கிடையே, இருநாட்டு ராணுவ உயரதிகாரிகளும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். சீன நாட்டு எல்லைக்குள் உள்ள மால்டோ என்ற பகுதியில் நேற்று காலை 11.30 மணிக்கு பேச்சுவார்த்தை கூட்டம் தொடங்கிய சுமார் 5 மணிநேரங்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்திய தரப்பு பேச்சு வார்த்தைக் அளவிற்கு லெப்டினன் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமை வகித்தார். சீன தரப்புக்கு மக்கள் விடுதலை ராணுவத்தின் (பி.எல்.ஏ) தெற்கு சிஞ்சியாங் ராணுவ பிராந்தியத்தின் தளபதியாக இருக்கும் மேஜர் ஜெனரல் லியு லின் தலைமை வகித்தார். ஆனால், பேச்சு வார்த்தையின் போது எந்த மாதிரி விஷயங்கள் பேசப்பட்டன என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், இந்தியா - சீனா எல்லையில் அமைதியை நிலைநாட்ட 2 நாடுகளும் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து படைகளை சீனா திரும்பப்பெறுகிறது என்றும் இந்திய வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மூலக்கதை