ஹஜ் பயண திட்டம்: சவுதி அனுமதிக்கு காத்திருப்பு

தினமலர்  தினமலர்
ஹஜ் பயண திட்டம்: சவுதி அனுமதிக்கு காத்திருப்பு

புதுடில்லி: ஹஜ் பயண திட்டம் குறித்து, சவுதி எடுக்கும் முடிவுக்குப்பின், மத்திய அரசு இறுதி முடிவை அறிவிக்க உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் ஆன்மிக நோக்கங்களுள் முக்கியமானது, வாழ்வில் ஒரு முறையேனும், மெக்கா, மெதினா செல்ல வேண்டும் என்பது தான். அப்படியிருக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மெக்காவில் புனித பயணம் மேற்கொள்ள சவுதி அரேபியா கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கானோர் தொழுகை நடத்தும் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.


இந்நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு, இஸ்லாமியர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள, இன்னும் சில வாரங்களே உள்ளன. ஆனால், சவுதி அரசு, தங்கள் நிலைபாட்டை பற்றி, இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை. அது வெளியான பின்னரே, மத்திய அரசு இறுதி முடிவை வெளியிடும் என, கூறப்படுகிறது. இந்நிலையில், பயணத்தை ரத்து செய்ய விரும்புபவர்களுக்கு, முழு தொகையும், திருப்பி அளிக்கப்படும்' என, ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது.

மூலக்கதை