வவ்வால் இனத்தை பாதுகாக்க சீன அரசு உத்தரவு

தினமலர்  தினமலர்
வவ்வால் இனத்தை பாதுகாக்க சீன அரசு உத்தரவு

பீஜிங்: வவ்வால் இனத்தை பாதுகாக்க, வவ்வாலை பாதுகாக்கப்படும் உயிரினமாக சீனா அறிவித்துள்ளது.

சீனாவில் வவ்வால் இறைச்சிக்கு பெரும் வரவேற்பு இருப்பதால் அவை அதிக எண்ணிக்கையில் வேட்டையாடப்படுகின்றன. மேலும் பால் சுரப்பு மற்றும் ஆண்மை விருத்திக்கு மருந்தாக பயன்படுவதால் வவ்வால்கள் சட்ட விரோதமாக வேட்டையாடப்பட்டு கடத்தப்படுகின்றன.


தற்போது கொரோனா தொற்று பரவலுக்கு வவ்வால்கள் முக்கிய காரணியாக கூறப்படுகிறது. இந்நிலையில் வவ்வால் இனத்தை பாதுகாக்கும் பொருட்டு அவற்றை இரண்டாம் நிலையில் இருந்து முதல் நிலையில் பாதுகாக்கப்படும் உயிரினமாக சீனா அறிவித்துள்ளது.

மூலக்கதை