மனநல ஆலோசனை வழங்கும் பிரிட்டன் இளவரசர்

தினமலர்  தினமலர்
மனநல ஆலோசனை வழங்கும் பிரிட்டன் இளவரசர்

லண்டன்: கொரோனாவால் மன உளைச்சலுக்கு ஆளானவர்களுக்கு, பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ், மனநல ஆலோசனை வழங்கி வருகிறார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இதுவரை 2 லட்சத்து 84 ஆயிரத்து 868 பெர் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 ஆயிரத்து 465 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், தனிமை காரணமாக பலர், அங்கு மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

பிரிட்டனில் 'ஷவுட் 85258' என்ற பெயரில் தொலைபேசி வாயிலான மனநல ஆலோசனை மையம் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. இதற்கு பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் நிதி உதவி செய்தார். இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் தனிமை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளவர்களுக்கு, தொலைபேசி வாயிலாக ஆலோசனை வழங்கும் தன்னார்வலர் பணி செய்து வருவதாக, இளவரசர் வில்லியம்ஸ் தெரிவித்தார்.

மூலக்கதை