மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்; சிங்கப்பூர் துணை பிரதமர் கவலை

தினமலர்  தினமலர்
மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்; சிங்கப்பூர் துணை பிரதமர் கவலை

சிங்கப்பூர்: கொரோனா பாதிப்பிலிருந்து சிங்கப்பூர் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும் என சிங்கப்பூர் துணை பிரதமர் கவலை தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிக பாதிப்புகளையும், உயிர் பலியையும் வாங்கி வருகிறது. தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் 37 ஆயிரத்து 527 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் புதிதாக 344 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் அந்நாட்டு துணை பிரதமர் ஹெங் ஸ்வீ கீட் பார்லிமென்டில் பேசுகையில் 'நாட்டின் வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகத்தில் கொரோனா தாக்குதல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதில் இருந்து மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்' என தெரிவித்தார்.

மூலக்கதை