ராகுல் குற்றச்சாட்டு மக்களுக்கு பணத்தை கொடுக்காமல் பொருளாதாரத்தை அரசு சீரழிக்கிறது

தினகரன்  தினகரன்
ராகுல் குற்றச்சாட்டு மக்களுக்கு பணத்தை கொடுக்காமல் பொருளாதாரத்தை அரசு சீரழிக்கிறது

* ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு உடனடிய10 ஆயிரம் பண உதவியை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்புதுடெல்லி: பொதுமக்கள் மற்றும் சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்க மறுப்பதன் மூலமாக பொருளாதாரத்தை மத்திய அரசு அழிப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கொரோனாவுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றார். கொரோனா ஊரடங்கு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டதில் இருந்தே மக்களுக்கு 7,500 பண உதவி வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை அவர் வலியுறுத்தி வருகின்றார். ஆனால், மத்திய அரசு இதை ஏற்காமல் பிடிவாதம் பிடித்து வருகிறது.இந்நிலையில், ராகுல் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘பொது மக்கள் மற்றும் சிறுகுறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்க மறுப்பதன் மூலமாக நாட்டின் பொருளாதாரத்தை மத்திய அரசு தீவிரமாக அழித்து வருகிறது. இது மத்திய அரசின் பணமதிப்பிழப்பு 2.0 நடவடிக்கையை போன்றது,’ என குறிப்பிட்டுள்ளார். மேலும் இதனுடன் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டின் பொருளாதாரம் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனத் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்த ஊடக செய்திகளையும், அறிக்கைகளையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு உடனடியாக 10 ஆயிரம் பண உதவியை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.  கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு மேற்கொண்ட தேசிய அளவிலான நடவடிக்கைகள் தோல்வி அடைந்து விட்டதாக ஏற்கனவே அவர் கூறி வருகிறார்.

மூலக்கதை