மகாராஷ்டிராவில் பாதிப்பு 82,000-ஐ தாண்டியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.46 லட்சமாக உயர்வு; 6929 பேர் பலி

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிராவில் பாதிப்பு 82,000ஐ தாண்டியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.46 லட்சமாக உயர்வு; 6929 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,46,628 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24  மணிநேரத்தில் மட்டும் 9971 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 287 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 6929 பேர் உயிரிழந்த நிலையில் 1,19,293 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 82,968 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2969 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 37,390 பேர்    குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 30,152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 251 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 16,395 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 27,654 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு,  761 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 10,664 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை