பிரிட்டனில் கொரோனா தாக்கம்; நோயாளிகளுக்கு உதவும் ராயல் ஹெல்ப்லைன்

தினமலர்  தினமலர்
பிரிட்டனில் கொரோனா தாக்கம்; நோயாளிகளுக்கு உதவும் ராயல் ஹெல்ப்லைன்

லண்டன்: பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் பக்கிங்ஹாம் அரண்மனையின் தன்னார்வ தொண்டு நிறுவனம் ராயல் பவுண்டேஷன். இதன் சார்பாக கொரோனா தாக்கப்பட்டவர்களுக்கு ஓர் ஹெல்ப்லைன் உருவாக்கப்பட்டுள்ளது.
ஷவுட் 85258 என்ற இந்த ஹெல்ப்லைன் 24 மணி நேரமும் செயல்படும். அவசர உதவி தேவைப்படுபவர்கள் இந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் மருத்துவப்பணியாளர்கள் உடனடியாக வந்து சிகிச்சைக்கு உதவுவர் என இளவரசர் வில்லியம் (27) மற்றும் இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். கொரோன தாக்கத்தின்போது உதவும் தன்னார்வலர்களைப் பாராட்டும் வகையில் சூம் செயலி மூலமாக வில்லியம், கேட் ஆகியோர் உரையாற்றினர். அவர்களது சேவைக்கும் நல் உள்ளத்துக்கும் நன்றி கூறினர்.



சசக்ஸ் அரண்மனையைச் சேர்ந்த ராயல் வாலண்டரி சர்வீஸ் அமைப்பு உறுப்பினர்கள் என்.ஹெச்.எஸ் மருத்துவமனையுடன் இணைந்து இந்தப் பணிகளை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் கொரோனா தாக்கம் பிரிட்டனில் ஓயாததால் இன்னும் குழந்தை ஜார்ஜை பள்ளிக்கு அனுப்பாத வில்லியம் வீட்டில் அவருக்கு பாடங்கள் நடத்தி வருகிறாராம்…!

மூலக்கதை