கொரோனா பாதிப்பு எதிரொலி: இந்த ஆண்டுக்கான புனித ஹஜ் பயணம் ரத்து...ஹஜ் கமிட்டி தலைவர் அறிவிப்பு!

தினகரன்  தினகரன்
கொரோனா பாதிப்பு எதிரொலி: இந்த ஆண்டுக்கான புனித ஹஜ் பயணம் ரத்து...ஹஜ் கமிட்டி தலைவர் அறிவிப்பு!

டெல்லி: கொரோனா நோய் தொற்றின் காரணமாக இந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்திற்கான ஏற்பாடுகள் ரத்து செய்யப்படுவதாக இந்திய ஹஜ் கமிட்டி கூறியிருக்கிறது. கொரோனா நோய் தொற்று காரணமாக புனித ஹஜ் பயணம் ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இஸ்லாமியர்களின் புனித தலமான ஹஜ் புனித யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் ஹஜ் கமிட்டி அஸோஸிஷன் தலைவர்  அபூபக்கர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இந்த ஆண்டிற்கான ஹஜ் பயண ஆயுத்த பணிகள் தொடங்குவதற்கு இன்னும் 2, 3 வாரங்களே உள்ள நிலையில், சவுதி அரேபியா அரசாங்கத்திடம் இருந்து எந்தவொரு உறுதியான தகவலும் கிடைக்கப்பெறவில்லை. இதனால், பயண ஏற்பாடுகளை தொடங்க முடியாத சூழல் நிலவுவதால், 2020ம் ஆண்டிற்கான ஹஜ் பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும், ஹஜ் பயணம் குறித்து பலர் எங்களிடம் விசாரித்து  வருகின்றனர். தங்கள்  கவலைகளையும் பகிர்ந்து வருகின்றனர். எனவே ஹஜ் பயணத்திற்கு பதிவு செய்தவர்கள் தங்கள் பயணங்களை ரத்து செய்ய விரும்பினால், எந்த பிடித்தமும் இல்லாமல், செலுத்திய முழு தொகையும் வழங்கப்படும் என ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது. இதற்காக ஹஜ் கமிட்டியின் இணையதள பக்கத்தில் பயண ரத்துக்கான படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் எனவும், வங்கி பரிமாற்றத்திற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை