அமைதி வழியில் அமெரிக்க போராட்டம்: மின்னபொலிஸில் ஊரடங்கு ரத்து

தினமலர்  தினமலர்
அமைதி வழியில் அமெரிக்க போராட்டம்: மின்னபொலிஸில் ஊரடங்கு ரத்து

வாஷிங்டன்: ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ் பிளாய்டின் மரணத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தை, அமைதியான வழியில் முன்னெடுக்க, போராட்டக்காரர்கள் முடிவு செய்துள்ளனர்.


அதே நேரம், இன அநீதிக்கு எதிரான போக்கில் மாற்றம் ஏற்படும் வரை, தங்கள் போராட்ட வேகத்தை தக்க வைத்துக் கொள்ளவும், போராட்டக்காரர்கள் சபதம் ஏற்றனர்.அமெரிக்காவில், போலீஸ்காரர் ஒருவர் தன் முழங்காலால் கழுத்தை நெருக்கியதில், ஜார்ஜ் பிளாய்டு என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் உயிரிழந்தார். இதனால், அமெரிக்க முழுதும், போராட்டம் வெடித்தது. மினியாபொலிஸ் நகரில், மக்கள் வீதிகளில் இறங்கி, இனவெறிக்கு எதிராக குரல் கொடுத்தனர். பல கடைகள், சூறையாடப்பட்டன.

இதையடுத்து, கலவரக்காரர்கள் மீது, கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், மிளகு பொடி துாவியும், கலவரத்தை அடக்க, போலீசார் முயன்றனர். இதனால், வன்முறை சம்பவங்கள் அதிகமானது.இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக, அமைதியான முறையில், மக்கள் போராடி வருகின்றனர். இதையடுத்து, மினியாபொலிஸ் மற்றும் செயின் பால் ஆகிய இடங்களில், நேற்று முன் தினம் இரவு முதல், ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டன.இதையடுத்து, போராட்டத்தை, அமைதியான வழியில் முன்னெடுக்க, போராட்டக்காரர்கள் முடிவு செய்துள்ளனர்.

அதே நேரம், இன அநீதிக்கு எதிரான போக்கில் மாற்றம் ஏற்படும் வரை, தங்கள் வேகத்தை தக்க வைத்துக் கொள்ளவும், போராட்டக்காரர்கள் சபதம் ஏற்றனர்.கடந்த வாரம், வெள்ளை மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக் காரர்களை கலைக்க, ராணுவம் வரவழைக்கப்பட்டது. இதனால் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.'இதுகுறித்து, ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பர் மற்றும் ஜெனரல் மார்க் மிலே, ராணுவ கமிட்டி முன் ஆஜராகி விளக்கமளிக்க வேணடும்' என, ஜனநாயக கட்சியை சேர்ந்த சபாநாயகர் நான்சி பெலோசி உள்ளிட்ட ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.


ஆனால், எஸ்பர் மற்றும் ஜெனரல் மிலே தரப்பு, நேரில் விளக்கம் அளிக்க மறுத்துள்ளது.இவாங்கா பேச்சைரத்து செய்தது பல்கலைஅமெரிக்காவின், கன்சாஸ் மாகாணத்தில் உள்ள விச்சிடா பல்கலைக் கழகத்தில், நேற்று முன் தினம், பட்டமளிப்பு விழா நடைபெற்றது.இதில், அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மகள், இவாங்கா டிரம்ப், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, துவக்க உரைஆற்றுவதாக அறிவிக்கப்பட்டு இருந்து.இந்நிலையில், அமெரிக்க கலவரத்தை, அதிபர் டிரம்ப் கையாண்ட விதம் குறித்து, விமர்சனங்கள் எழுந்துள்ளதை அடுத்து, இவாங்காவின் உரையை, பல்கலைக்கழக நிர்வாகம், கடைசி நிமிடத்தில், ரத்து செய்தது.

அமெரிக்க போராட்டத்துக்கு தென் ஆப்ரிக்க அதிபர் ஆதரவுஜார்ஜ் பிளாய்டு மரணம் குறித்து, தென் ஆப்ரிக்க அதிபர், சிரில் ராமபோசா கூறியதாவது:அமெரிக்காவில் நிகழ்ந்துள்ள சம்பவம், அப்பட்டமான இனவெறி தாக்குதல். தற்போது அங்கு நிகழ்ந்து வரும் போராட்டம், உலக அளவில், இனவெறிக்கு எதிரான போக்கை முடிவுக்கு கொண்டு வரும், திருப்புனை போராட்டமாக கருத வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை